சாதாரணப் பொருட்கள், அசாதாரணக் கதைகள்
அவர்களுடையதைப் போன்ற அரும்பொருள் அல்லது கதை உங்களிடம் இருக்கிறதா? இங்கு வழங்குங்கள்.
அவற்றை அனுப்பிக்கொண்டே இருங்கள்
நாங்கள் இதுவரை பெற்றுள்ள பங்களிப்புகளில் சிலவற்றைப் பாருங்கள்.
அறிமுகம்
அரும்பொருள்கள் மூலம் கூறப்படும் நமது தேச நிர்மாண ஆண்டுகள்
1950களிலிருந்து 1970கள் வரை சிங்கப்பூரின் உருமாற்றத்திற்கான காலம்
நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் பலகலாச்சார சிங்கப்பூரைக் கற்பனை செய்தனர். அவர்கள் பெரிதாகக் கனவு கண்டனர். துணிவுடன் சவால்களை வாய்ப்புகளாக மாற்றினர். நேர்மைக்கும் தன்னலமற்ற சேவைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினர்,
வாழ்க்கையின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த சிங்கப்பூரர்களும் நமது தலைவர்களுக்குப் பின்னால் ஒன்றுதிரண்டு, மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொண்டு நம் அடிப்படை விழுமியங்களுக்கு ஏற்பத் தாங்களும் வாழ்ந்திராவிட்டால், நமது புதிய தேசம் வளர்ச்சி கண்டிராது.
இந்தக் கண்காட்சியில் நீங்கள் பார்க்கும் அரும்பொருள்கள், இத்தகைய முதல் தலைமுறைக் கதைகளுக்குச் சான்றாக விளங்குகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மீள்திறன், சமுதாய உணர்வு போன்ற விழுமியங்கள் எப்படி கொவிட்-19 போன்ற நம் தலைமுறைச் சவால்களுக்குத் தொடர்ந்து பயனுள்ளவையாக உள்ளன என்பதைப் புலப்படுத்துகின்றன.
இந்த விழுமியங்களின் உணர்வைப் படம்பிடித்துக்காட்டும் நாம் பாடும் தேசிய தின பாடல்களைக் கேட்கத் தவறாதீர்கள்.
அத்தியாயம் 1
சிங்கப்பூருக்கு நம் பங்கை ஆற்றுதல்
நமது தேச நிர்மாண ஆண்டுகள் எண்ணிலடங்காச் சுயநலமற்ற செயல்களையும் தியாகங்களையும் கண்டன. மற்ற பிரிவினர்களுடன், மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழிலாளர்கள் முதலியோரும் ‘கோத்தோங் ரோயோங்’ எனும் சமூக ஒத்துழைப்பு உணர்வை வெளிக்காட்டினர். நகரைச் சுத்தம் செய்தல், சாலைகள் அமைத்தல், கட்டட நிதிகளுக்குப் பங்களித்தல் போன்றவற்றுக்கான பல்வேறு அழைப்புகளுக்கு ஆதரவளித்தனர்.
கொவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் இந்த சமுதாய உணர்வும் ஒற்றுமையும் இன்றும் நம்மோடு உள்ளன. பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றும் தனிநபர் செயல்கள், சிரமங்களுக்கிடையேயும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றும் அத்தியாவசியச் சேவைகள், மற்றவர்களுக்கு ஆதரவளிக்க அடித்தளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் என அனைத்திலும் நாம் அதனைப் பார்க்கிறோம்.
சிங்கப்பூரைத் தற்காத்தல்
புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடு என்னும் முறையில் சிங்கப்பூர் தன் தற்காப்பை விரைவாகக் கட்டி எழுப்பும் நெருக்குதலை எதிர்கொண்டபோது, தொடக்ககால சிங்கப்பூரர்கள் துணிவுடன் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வந்தனர்.
சமுதாயத்தின் மீது அக்கறைகாட்டுதல்
சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருக்கும் இயக்கம், சமூக ஒத்துழைப்புத் திட்டம் போன்றவை மக்கள் தங்கள் சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஒன்றிணைந்த வழிமுறைகளில் சில.
அத்தியாயம் 2
ஒரு மக்கள், ஒரு தேசம், ஒரு சிங்கப்பூர்
1959ல் தன்னாட்சி பெற்றதிலிருந்து, பல கலாச்சாரக் கொள்கை சிங்கப்பூரின் அடித்தளமாக இருப்பதுடன், சுதந்திரம் பெறுவதற்கு முந்திய சமூகப் பதற்றங்கள் மிகுந்த காலத்தைக் கடந்து வரவும் உதவியது.
வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்த ஒரே மக்களாக ஒன்றுபட்டு நிற்க நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரர்களை ஒன்று திரட்டினர்.
நமது தேசத்தை வரையறுத்தல்
நமது தேசியச் சின்னங்களில் முதலாவது 1959இல் அறிமுகம் செய்யப்பட்டது. அவை ஒரே சிங்கப்பூராக நாம் இருப்பதற்கான விழுமியங்களை நமக்கு நினைவுபடுத்தி நம்மை ஒன்றிணைக்கின்றன.
இன நல்லிணக்கத்தை வளர்த்தல்
1960களின் தொடக்கத்தில் மூண்ட இனக் கலவரங்களின்போது, பலகலாச்சாரத் தன்மையை ஆதரிக்கவும் மக்களை ஒன்று திரட்டவும் சிங்கப்பூர் நமது முதல் தலைமுறைத் தலைவர்களையும் சமூகத்தையும் நம்பியிருந்தது.
எல்லோருக்குமான கலாச்சாரக் கலைநிகழ்ச்சிகள்
சிங்கப்பூரில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் நம் பன்மைத் தன்மையைப் போற்றுவதை ஊக்குவிக்கவும் கலைநிகழ்ச்சிகள் ஒரு வழிமுறையாக அமைந்தன.
அத்தியாயம் 3
சிங்கப்பூர் எப்படிச் சிறந்து விளங்க முடியும் என்பதை நாம்
உலகிற்குக் காட்டப்போகிறோம்
கோவின் மடமை
கோவின் மடமை என்று கருதப்பட்ட ஒன்று சிங்கப்பூரின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான வெற்றிகரமான முயற்சியாக அமைந்தது.
கப்பல்துறையின் எதிர்காலம்
1967ல் பிரிட்டிஷ் இராணுவம் மீட்டுக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு சிங்கப்பூரின் தற்காப்புக்கு மட்டுமல்ல பொருளாதாரத்திற்கும் கூட ஒரு சவாலாக அமைந்தது. சிங்கப்பூர் விரைவாக மாற வேண்டியதிருந்தது. நமது கப்பல்துறை முன்பைக் காட்டிலும் மேலும் அதிக முக்கியத்துவம் பெற்றது.
பெருமையுடன் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது
பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தொழிற்கூடங்களை இங்கு நிறுவிச் செயற்படத் தொடங்கிய பின், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் விரைவில் மக்கள் நன்கறிந்த பொருள்களானதோடு அவற்றின் தரத்திற்கும் பெயர் பெற்றன.
நமது கதவுகளை உலகிற்குத் திறந்துவிடல்
சிங்கப்பூர் முதலீடுகளைச் செயலூக்கத்துடன் நாடிய அதே வேளையில், மாசுக் கட்டுப்பாட்டில் நமது தலைவர்கள் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை.
அத்தியாயம் 4
வருங்காலம் இன்றே இங்கு
வீவக வீடுகள் இல்லாவிட்டால் நமது அக்கம்பக்கங்கள் எப்படித் தோற்றமளிக்கும்? சாலையோர மரங்கள் இல்லாவிட்டால், இந்தப் பூந்தோட்ட நகரம் எப்படி இருக்கும்?
நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரின் நிலவனப்பு விவரங்களில் அணுக்கமான கவனத்தைச் செலுத்தி, இன்று நாம் அனுபவிக்கும் பழக்கப்பட்ட காட்சிகளில் பலவற்றை உருவாக்க சிங்கப்பூரர்களுடன் சேர்ந்து பணியாற்றினர். முன்னெப்போதும் காணாத அளவில் வீட்டுடைமைத் திட்டத்தை நிறைவேற்ற, நமது தேசத்தின் தொடக்ககால வளர்ச்சிக்குத் துணிவுமிக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டன. இவை அனைத்தும் சிங்கப்பூரை ஒரு பூந்தோட்ட நகராக்கும் கனவை நனவாக்க உதவின. எதிர்கால நகரங்களைச் சிங்கப்பூருக்கு இன்றே கொண்டுவந்தன.
மக்களுக்கான இல்லம்
சுதந்திர சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டம் பெரும் இலக்குகளைக் கொண்டிருந்தது. வாழ்வதற்கான புதிய வழிவகைகளுக்குப் பலர் தங்களை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அவர்கள் புது நகரங்களில் வீடுகளைப் பெற்றனர்.
பூந்தோட்டத்தில் ஒரு நகரமாக சிங்கப்பூரை மாற்றுதல்
நமது இயற்கைச் சூழலைப் பாதுகாத்தலும் சிங்கப்பூரைப் பசுமையாக்குதலும் எப்போதுமே, நமது தொடக்ககால நாட்டு நிர்மாண ஆண்டுகளில் கூட, ஒரு முன்னுரிமையாக இருந்துள்ளது.
உங்கள் அரும்பொருட்களாலும் கதைகளாலும்
எங்கள் கண்காட்சியை வளப்படுத்துங்கள்