அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ப: சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம், சிங்கப்பூர் தேச நிர்மாணத்தின் முதல் இருபது ஆண்டுகளில் (1950கள் முதல் 70கள் வரை), சிங்கப்பூரின் தொடக்ககால வரலாற்றில் முக்கியப் பங்கு வகித்த லீ குவான் இயூ, எஸ் ராஜரெத்தினம், டாக்டர் கோ கெங் சுவீ (சிங்கப்பூரின் முதல் நான்கு அமைச்சரவைகளில் இருந்த மற்றவர்களிடையே) போன்ற முக்கியத் தலைவர்கள் மீது கவனம் செலுத்தும். நமது நாட்டு நிர்மாண வரலாற்றின் மைல்கல் மற்றும் முக்கிய கொள்கைகளை விவரிக்கும் அதே வேளையில், சுதந்திரத்திற்குப் பிந்திய சிங்கப்பூரின் தலைமைத்துவத்தில் முக்கியப் பங்காற்றிய தனிநபர்களையும் நாம் பார்ப்போம். அவர்களில் பின்வருவோரும் அடங்குவர். ஆனால் அவர்கள் மட்டுமல்ல:
ப: 2015லிருந்து 2017 வரை, சிங்கப்பூரின் தொடக்ககால விழுமியங்களை நினைவகம் நினைவுகூரும் என்று தாங்கள் நம்புவதாக ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்கள் தெரிவித்தனர். பொதுமக்களுடன் தொடர்ச்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வின் வழி இந்த விழுமியங்கள் திரட்டப்பட்டன.
- பலகலாசாரத்தன்மை: சிங்கப்பூரர் அடையாளத்தையும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் வேளையில் நமது தனித்தன்மைமிக்க கலாசாரப் பண்புகளைப் போற்றிப் பாராட்டுதல்
- துணிச்சல்: பெரிதாகக் கனவு காண்பதற்கான தைரியமும் மாறுபட்டவர்களாக இருப்பதற்கான துணிவும் கொண்டிருத்தல்
- மீள்திறன்: விடாமுயற்சியை எடுத்துக்காட்டுவதும் பின்னடைவுகளுக்குப் பின்னரும் மீண்டு எழுந்து வருவதும்
- திறந்த மனப்பான்மை: வெளிநோக்கிய பார்வையுடன் உலகோடு தொடர்பு கொண்டிருத்தல், அது கொண்டுவரும் வாய்ப்புகளை வரவேற்றல்.
- தன்னலமின்றி மற்றவர்களுக்குச் சேவையாற்றுதல்: பொதுக் கடமை மற்றும் இலட்சிய உணர்வு கொண்டிருத்தலும் பொதுக் குறிக்கோளை நோக்கி ஒன்றாகப் பணியாற்றுதலும்
- நேர்மை: கடினமாக இருந்தபோதும் சரியானதைச் செய்வதற்கான தார்மீகத் துணிவும் பொறுப்பும் இருத்தல்
1950களிலிருந்து 1970கள் வரையிலான சிங்கப்பூரின் வரலாற்றைக் கூறும் பொருட்கள் மற்றும் கதைகள் மீது நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம். நமது வரலாற்று மைல்கல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய பொருட்களை நாங்கள் நாடுகிறோம்; இவை, அன்றாடப் பொருட்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் வரை இருக்கலாம். பகிர்ந்துகொள்ள உங்களிடம் ஒரு கதை மட்டுமே இருந்தாலும் அதைக் கேட்க நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.
பொருட்கள் மற்றும் கதைகள் பற்றிய எடுத்துக்காட்டுகளுக்கு விருப்பப் பட்டியலை நீங்கள் பார்க்கலாம். இருப்பினும், விருப்பப் பட்டியல் சாத்தியமான பொருட்கள் மற்றும்/அல்லது கதைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கியது அல்ல. இது ஒரு வழிகாட்டி மட்டுமே. உங்கள் பொருள் மற்றும்/அல்லது கதை விருப்பப் பட்டியலில் இல்லை என்றாலும் தயவுகூர்ந்து அதனை எங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தயங்காதீர்கள்.
ப: ஆம், உங்களால் நினைவுகூர முடிந்த விவரங்களுடன் உங்கள் பொருளையும் கதையையும் எங்களுடன் தயவுகூர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களால் நிரப்ப இயலாத பகுதிகளைப் பொறுத்தவரை, தற்போதைக்கு “N.A” – பொருந்தாது எனத் தட்டச்சு செய்யவும்.
ப: பொருட்கள் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில், குறிப்பாக அவை உங்களின், உங்கள் குடும்பத்தின் வரலாற்றில் முக்கிய பங்கு வகித்தால், அவை உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சிங்கப்பூரின் வரலாறு பற்றிய அறிதலும் காட்சிப்படுத்துதலும் தேசிய மரபுடைமை கழகத்துடன் (NHB) மக்கள் பகிர்ந்துகொண்ட பொருட்களால் பெரிதும் வளப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே அந்தப் பொருள் பற்றிய மேல் விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டால் நன்றிக் கடன் பட்டிருப்போம், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் மேலும் பேசலாம்.
ப: எங்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒவ்வொரு பொருளையும் கதையையும் மதிக்கிறோம். அவை தனி நபர், சமூகம், தேசியம் ஆகிய எந்த நிலையில் இருந்தாலும், அவை ஒவ்வொன்றின் மதிப்பையும் புரிந்துகொள்கிறோம். இருந்தாலும், எல்லாப் பங்களிப்புகளையும் எங்களால் எடுத்துக்கொள்ள முடியாது. சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகத்தின் விழுமியங்கள்-அடிப்படையிலான கதையுடன் மிகவும் தொடர்புடைய பொருட்களை அடையாளங்காண நாங்கள் வழங்கப்படுபவற்றை கவனமாக ஆராய்வோம். அவ்வாறு இருந்தாலும், நினைவகம் 2027ல் திறக்கப்படும்போது, சுழற்சி முறையில் அமைந்த கண்காட்சிகளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அப்போது சமூக ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பிற்கு மேலும் வாய்ப்புகள் இருக்கும்.
ப: கிர்ந்துகொண்டமைக்கு நன்றி. அதற்கு நீங்கள் செலவிட்ட நேரத்தையும் மேற்கொண்ட முயற்சியையும் நாங்கள் பாராட்டுகிறோம். உங்களின் பங்களிப்புளை ஆராய எங்களுக்குச் சிறிது அவகாசம் கொடுங்கள். அதன் முடிவு குறித்துத் தெரிவிக்க உங்களுடன் நாங்கள் தொடர்புகொள்வோம். அதற்கிடையே, எங்களின் இணையவழிக் கண்காட்சியைப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறோம், நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால், எங்களின் நடமாடும் கண்காட்சியைச் சென்று பாருங்கள்.