A Memorial for those who built our nation

சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம்

நமது தேசத்தை நிர்மாணித்தவர்களுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம்

ஒரு மெய்நிகர்ப் பயணம் மேற்கொள்ளுங்கள்

மெய்ந்நிகர் சுற்றுலாவில் காணப்படும் படங்கள் ஓவியரின் கற்பனையில உருவானவை.

சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் கிழக்குக் கரையாரப் பூந்தோட்டத்தில் ஓர் ஒருங்கிணைந்த காட்சிக்கூட மற்றும் பூந்தோட்ட அனுபவத்தை அளிக்கும்.

சுதந்திர சிங்கப்பூர் எப்படி உருவானது என்பதை நினைவகம் நினைவுகூருவதுடன் நமது தேசத்தின் எதிர்காலத்தை ஒன்றுபட்டு உருவாக்க சிங்கப்பூரர்களுக்கு ஊக்கமளிக்கும்

மன ஊக்கமளிக்க வடிவமைக்கப்பட்டது

சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவக வடிவமைப்பு, சிங்கப்பூரின் முதல் தலைமுறைத் தலைவர்கள் விட்டுச் சென்ற கொடையைத் தேடிச் செல்லும் ஒரு பாதையைச் சித்திரிக்கிறது.

இந்தக் கட்டட அமைப்பு ஒரு சின்னமாக அமைந்திருப்பதற்கு மேலாக, ஒவ்வொரு தலைமுறைச் சிங்கப்பூரர்களுக்கும் ஒரு வாழும் நினைவகமாக இருக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும், நமது தேசத்தின் முக்கிய மைல்கற்களைக் கொண்டாடும் கண்காட்சிக் கூடங்கள் போன்ற இடங்கள் இதில் அமைந்திருக்கும். அதோடு, நமது கடந்த காலத்தை கெளரவித்து எதிர்கால இலட்சியத்தைக் காட்டும் ஒரு காட்சிக் கூடமும் இங்கு இருக்கும். நினைவகம் 2027இல் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இடவ ஓவியரின் கற்பட யில் உருவா டவ. இைப்பபயர்கள் மாற்றத்திற்குரியடவ.

SOM - Founders' Memorial
FM Central View

வாகனத்தில் நினைவகத்திற்கு வரும்போது தெரியும் காட்சி

Arrival Plaza

வருகைச் சதுக்கம்

Night time amphitheatre

வட்டரங்கத்தின் இரவுத் தோற்றம்

Viewing Gallery

பார்வையிடும் கண்காட்சிக் கூடங்கள்

Visitor Centre

வருகையாளர் மையம்

FM Lobby

இணைப்புக் கட்டடம்

பூந்தோட்டத்தில் நினைவகம்
இடவ ஓவியரின் கற்பட யில் உருவா டவ. இைப்பபயர்கள் மாற்றத்திற்குரியடவ.

FM garden

முற்றம்

இவை ஓவியரின் கற்பனையில் உருவானவை. இடப்பெயர்கள் மாற்றத்திற்குரியவை.

FM garden

விளையாட்டுத்திடல்

இவை ஓவியரின் கற்பனையில் உருவானவை. இடப்பெயர்கள் மாற்றத்திற்குரியவை.

Tree planting trail

மரம் நடும் பாதை 

இவை ஓவியரின் கற்பனையில் உருவானவை. இடப்பெயர்கள் மாற்றத்திற்குரியவை.

Reflection Pool

இயற்கையோடு இயைந்த ஏரி

இவை ஓவியரின் கற்பனையில் உருவானவை. இடப்பெயர்கள் மாற்றத்திற்குரியவை.

மரீனா நீர்த்தேக்கத்தின் அருகில் மீட்கப்பட்ட நிலப்பரப்பில் நகரின் வான்வெளியை நோக்கி கிழக்குக் கரையோரப் பூந்தோட்டம் அமைந்துள்ளது. அது நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் நில மற்றும் நீர் சார்நத தடைகளைச் சமாளித்து அவர்களின் துணிச்சல் மற்றும் இலட்சியத்தின் வழி உலகிலேயே மிகவும் வாழத்தக்க நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூரை உருவாக்கியதையும் நாம் எவ்வாறு தொடர்ந்து சவால்களை வாய்ப்புக்களாக மாற்றலாம் என்பதையும் சக்திமிக்க வகையில் பேசுகிறது.

“பூந்தோட்ட நகரம்” மற்றும் “தண்ணீர்” கதை, கடற்கரையோர கிழக்குப்பகுதிப் பெருந்திட்டத்துடன் பின்னப்பட்டுள்ளது. காலப் போக்கில் சிங்கப்பூர் பூந்தோட்ட நகரிலிருந்து இயற்கையில் அமைந்த நகரமாக பரிணாம வளர்ச்சி அடைந்ததைக் காட்டுகிறது, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சிங்கப்பூரைப் பசுமைப்படுத்துதல் மற்றும் இயற்கையைப் பேணிக்காத்தலுக்கான நமது கடப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பூந்தோட்டம் வழியாக ஓடி மரினா நீர்த்தேக்கத்துடன் இணையும் நீர்நிலைகள் இயற்கைச் சூழலை வலுப்படுத்தி பல்லுயிர்த் தன்மையை மேம்படுத்தும் நீர்வழிகளை உருவாக்குகின்றன.

இவை எல்லாம் தொடங்கியது எப்படி

சிங்கப்பூர்ச் சிற்பிகள் நினைவகம் பிரமாண்டமானதொரு கட்டுமானமாக இருக்கவேண்டியதில்லை, ஆனால் அது நமது இலட்சியங்கள், நமது விழுமியங்கள், நமது நம்பிக்கைகள் நமது பேரார்வங்களின் அடையாளமாக இருக்கவேண்டும். அது எல்லாச் சிங்கப்பூரர்களுக்கும் சொந்தமாக இருப்பதுடன் நம் அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும். நமது வரலாற்றின் முக்கியமான காலத்தை நாமும் வருங்காலத் தலைமுறையினரும் நினைவுகூர்ந்து நம் முதல் தலைமுறையினரின் இலட்சியங்களைச் சிந்தித்துப் பார்த்து, தேச நிர்மாணப் பணியைத் தொடருவதற்கான பற்றுறுதிமொழியை எடுத்துக்கொள்ளும் இடமாக இது இருக்கவேண்டும்,
பிரதமர் லீ சியன் லூங் 2015 ஏப்ரல் 13 அன்று வெளியிட்ட நாடாளுமன்ற அறிக்கை

சிங்கப்பூரர்களால் வடிவமைக்கப்பட்டது