Banner Image

குடியுரிமையும் பகிர்ந்துகொள்ளப்படும் சிங்கப்பூரர் அடையாளத்தை உருவாக்குதலும்

சிங்கப்பூர் ஒரு பல இன தேசமாக இருக்கும். நாம் எடுத்துக்காட்டாக இருப்போம். இது மலாய் தேசமல்ல, இது சீன தேசம் அல்ல, இது இந்திய தேசமல்ல. ஒவ்வொருவருக்கும் இங்கு இடமிருக்கும்: எல்லோரும் சமம்; மொழி, கலாச்சாரம், சமயம்
லீ குவான் இயூ, 9 ஆகஸ்ட் 1965

நாங்கள்எதை நாடுகிறோம்

பலகலாசாரத்தன்மையை வளர்த்து, பல இன சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்துப் பகிர்ந்துகொள்ளப்படும் நம் அடையாளத்தை மறுஉறுதிப்படுத்திய அனுபவங்கள் பற்றிய பொருட்களையும் கதைகளையும் நாங்கள் திரட்டி வருகிறோம்.
பிறைச் சந்திரன் என்றென்றும், இளமையாக இருக்கும் ஒரு நாட்டைக் குறிக்கிறது. இது நம் மக்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றை வெளிப்படுத்துகிறது. ... புதிய சிங்கப்பூர்.... கடந்த காலத்தில் என்ன செய்தது என்பதைவிட வருங்காலத்தில் என்ன செய்ய விரும்புகிறது என்பதில் அது ஊக்கம் பெறுகிறது.
எஸ் ராஜரெத்தினம், 1959 நவம்பர் 11

தேசியச் சின்னங்கள்

மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:

  • 1959 டிசம்பரில் இடம்பெற்ற தேசிய விசுவாச வாரத்தில் தேசியக் கொடி, மரபுச் சின்னங்கள், தேசிய கீதம் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
  • 1966இல் தேசியப் பற்றுறுதிமொழியின் அறிமுகம்
  • 1966இல் பள்ளிகளில் கொடியேற்றச் சடங்கு அறிமுகம்

உங்களுக்கு முதன் முதலில் தேசியக் கொடி, தேசிய கீதம், பற்றுறுதிமொழி முதலியவை அறிமுகம் செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள், பொருட்கள் சொந்த நினைவுப்பொருட்கள் ஏதும் உங்களிடம் உள்ளனவா? எந்த வகையில் அத்தருணம் உங்களுக்கு முக்கியமானதாக இருந்தது? நமது தேசியச் சின்னங்கள் எப்படி முக்கியமாக இருந்தன?

 

Card

1959இல் மாணவர்களுக்குச் சிங்கப்பூர் நாட்டின் தேசிய விசுவாச வார அட்டை விநியோகிக்கப்பட்டது

குமாரி குவெக் யுவென் யுவான், அனான் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

Card

நைது சதசிய கீதப் பதிறை உள்ளடக்கிய 1960களின் இறசத் தட்டு.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

தேசிய விளையாட்டரங்கத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அல்லது தேசிய தின அணிவகுப்பில் நீங்கள் கலந்துகொண்டிருக்கிறீர்களா? அப்போதைய சூழல் எப்படி இருந்தது? அங்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பான புகைப்படங்கள், பொருள்கள் அல்லது மற்ற நினைவுப்பொருள்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். சமுதாய உணர்வை வளர்ப்பதில் தேசிய விளையாட்டரங்கின் பங்கு குறித்து என்ன நினைத்தீர்கள் என்று கூறுங்கள்.

வலுவான பலகலாசாரக் கருப்பொருளைக் கொண்ட அனேகா ரகம் ராக்யாட் திறந்தவெளிக் கலை நிகழ்ச்சிகள் முன்னாள் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் 1959 முதல் 1960களின் தொடக்கம் வரை படைக்கப்பட்டன “வரலாற்றில் முதன்முறையாக, சீனர்கள் மலாய் நடனத்தையும், மலாய்க்காரர்கள் சீனர்களின் தெருக்கூத்தான வாயாங்கையும் பாடல்களையும் இந்திய நடனங்களையும் பார்த்தனர்.”
லீ கூன் சொய், 1981

சமூக இடங்களும் நிகழ்ச்சிகளும்

மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:

  • தேசிய அரங்கு, தேசிய விளையாட்டரங்கு போன்ற சமூக இடங்களின் உருவாக்கம்
  • அனேகா ரகம் ராக்யாட் தொடர் கலை நிகழ்ச்சிகள், தேசிய அரங்கின் திறப்பு விழாவிற்கான தென் கிழக்காசியக் கலை விழா, தேசிய விளையாட்டரங்கில் தேசிய தின அணிவகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகள்

இந்த இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கிடைத்த நினைவுப்பொருட்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளனவா?

Card

1959 ஆகஸ்ட் 2ஆம் தேதி பூ மலையில் படைக்கப்பட்ட முதல் அனேகா ரகம் ராக்யாட் (மக்கள் கலை நிகழ்ச்சி) கலை நிகழ்ச்சியில் திரண்ட கூட்டம்.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்

Card

1960இல் நகர மண்டபப் படிக்கட்டுகளில், பாடல்கள், நடனங்கள், நாடகம் என நான்கு மணி நேரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலாட் எனும் தற்காப்புக் கலை நிகழ்ச்சியும் படைக்கப்பட்டது.

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

விளையாட்டுகளின் மூலம் சக மனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும் தங்களால் முடிந்த அளவு சிறப்பாகப் பங்காற்றும் குடிமக்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்..... பள்ளிகளிலிருந்தும் உயர்கல்வி நிறுவனங்களிலிருந்தும் வருங்காலக் குடிமக்கள் ஏட்டுக் கல்வியும் தொழில்சார் கல்வியும் மட்டுமின்றி விளையாட்டுகளால் மட்டுமே வளர்க்கப்படக் கூடிய குழு உணர்வும் சமுதாய விழுமியங்களும் புகட்டப்பட்டு வருவார்கள்.
ஒத்மான் வோக், 1966 டிசம்பர் 7

இந்த இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் கிடைத்த நினைவுப்பொருட்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளனவா?

Card

தேசிய அரங்கைக் கட்ட நிதி திரட்டுவதற்காக ஒரு வெள்ளி, ஒரு செங்கல் என்ற 1961இல் தொடங்கப்பட்ட இயக்கத்தின்போது வெளியிடப்பட்ட நன்கொடைக் கூப்பன். இந்த அடையாளச் சின்னம், தன்னாட்சி பெற்றதைக் குறித்ததோடு தேசத்தின் ஒற்றுமையில் மக்களுக்குள்ள நம்பிக்கையின் சின்னமாகவும் விளங்கியது.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

Card

தேசிய விளையாட்டரங்கத்தின் உருவாக்த்தை விளம்பரம்படுத்தும் சுவரொட்டி. இது இந்த அரங்கம் சிங்கப்பூர்ச் சமுதாய உணர்வை வளர்ப்பதை முதல் தலைமுறைத் தலைவர்கள் வலியுறுத்தியதைப் பிரதிநிதித்தது.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

தேசிய அரங்கு உருவாக்கப்பட்டபோது அல்லது அங்கு கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின்போது நீங்கள் சேகரித்த பொருள்கள் ஏதும் உங்களிடம் உள்ளனவா?

சமுதாயப் பிணைப்பை மேம்படுத்தும் முயற்சிகள்

மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:

  • 1964 இனக் கலவரங்களைத் தொடர்ந்து நல்லெண்ணக் குழுக்கள் அமைக்கப்பட்டதும் அவற்றின் பணியும்
  • சமுதாயப் பிணைப்பை வளர்க்க மற்ற சமூகக் குழுக்களின் அமைப்பு

நீங்கள் 1950களிலிருந்து 1970கள் வரையில் நல்லெண்ணக் குழு அல்லது குடிமக்கள் ஆலோசனைக் குழுவில் ஓர் அங்கமாக இருந்தீர்களா அல்லது அவற்றின் பணியால் எந்த வகையிலாவது தாக்கத்தை உணர்ந்திருக்ககிறீர்களா? புகைப்படங்கள், துண்டு வெளியீடுகள், முதல் நாள் அஞ்சல் உறைகள் போன்ற பொருள்களையும் கதைகளையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Card

1964 ஜூலை 24ஆம் தேதி கேலாங் சிராய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் பேசும் திரு லீ குவான் இயூவும் (அப்போதைய சமூக விவகார அமைச்சரான) திரு ஒத்மான் வோக்கும்.

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

Card

சிங்கப்பூர் எங்கும் செயற்பட்ட நல்லெண்ணக் குழுக்களின் வெற்றி குறித்து 1964 ஜூலை 28இல் வெளியிடப்பட்ட செய்தித்தாள் கட்டுரை.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.

பங்களியுங்கள்