நாங்கள் எதை நாடுகிறோம்
தூய்மையும் பசுமையும்
தூய்மைக்கேட்டிற்கு எதிரான செய்தியையும் பூந்தோட்ட நகர இலட்சியத்தையும் ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, நமது தலைவர்கள், தூய்மையையும் மரம் நடும் நாட்களையும் ஊக்குவிக்கும் பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றனர். நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியிலாவது நீங்கள் கலந்துகொண்டிருக்கிறீர்களா? இங்குள்ள படம் காட்டுவதுபோன்றுஇந்த நிகழ்ச்சிகளில் நமது முதல் தலைமுறையினர் பயன்படுத்திய, இங்கு படத்தில் உள்ள துடைப்பங்களையும் மண்வெட்டிகளையும் நாங்கள் நாடுகிறோம்.
மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:
- மரம் நடும் நாட்களும் பசுமைப்படுத்தும் மற்ற முயற்சிகளும்
- தண்ணீரைச் சேமிப்பதற்கான இயக்கம்
- சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருத்தலும் தூய்மைக்கேட்டுக்கு எதிரான மற்ற இயக்கங்களும்
திரு சுவா சியன் சின் (அப்போதைய சுகாதார அமைச்சர்),1968இல் தூய்மைக்கேட்டிற்கு எதிரான செய்தியைத் தமது மெக்பர்சன் தொகுதியில் விளம்பரப்படுத்துகிறார்.
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
1974ஆம் ஆண்டில் மரம் நடும் தினத்தில் (அப்போதைய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்) டாக்டர் டோ சின் சாய்.
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
சிங்கப்பூர்ப் பூமடை பவளியிட்ை மரம் ெடுைதற்கான வழிகாட்டி. இங்கு ஆங்கிை, மைாய், சீ , தமிழ் பமாழிகளில் காைப்படுகின்றது.
சிங்கப்பூறரப் பசுறைப்படுத்தும் ததாடக்க கால முயற்சிகளின் ஒரு பகுதியாக, சமூகத்தின் ஆதரறையும் பங்தகடுப்றபயும் ஊக்குைிக்கும் ைறகயில் 1963இல் “ைரம் நடுைதற்கான ைழிகாட்டி” தைளியிடப்பட்டது.
சிங்கப்பூர்ப் பூமலை ஆதரவுடன்.
1950களில் எச்சில் துப்புவதற்கு எதிரான இயக்கத்தின்போது பயன்படுத்தப்பட்ட சுவரொட்டி
கல்வி அமைச்சின் மரபுடைமை நிலையம்ன் அன்பளிப்பு.
கோத்தோங் ரோயோங் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் வடிகாலில் உள்ள குப்பைகளை அகற்றுகின்றனர்.
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
தூய்மைக்கேட்டிற்கு எதிரான இயக்கத்தின் ஓர் அங்கமாக, சுவரொட்டிகள், துண்டு வெளியீடுகள், அஞ்சல்துறை சார்ந்த பொருள்கள் மற்றும் திரைப்பட நுழைவுச் சீட்டுகள், “சிங்கப்பூரைத் தூய்மையாக வைத்திருப்போம்” என்ற முழக்க வரியுடன் அச்சிடப்பட்டன. சிங்கப்பூரைப் பசுமையாக்குதலைப் போற்றிப் பாராட்டவும் பங்குகொள்ளவும் மரம் நடுதல் வழிகாட்டி போன்ற இயக்க வெளியீடுகளும் தயாரிக்கப்பட்டன. தங்களின் வசிப்பிடச் சுற்றுப்புறத்தை மேம்படுத்த கோத்தோங் ரோயோங் திட்டம் போன்ற சமுதாய முயற்சிகளிலும் மக்கள் பங்கேற்றனர்.
இந்த இயக்கங்களின் ஒரு பகுதியாகத் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அல்லது 1950களிலிருந்து 1970கள் வரை இவற்றில் நீங்கள் கலந்துகொண்டபோது கிடைத்த பொருட்கள் உங்கள் வீட்டில் உள்ளனவா?
தண்ணீர்
மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:
- 1961லும் 1963லும் தண்ணீர்ப் பங்கீட்டுப் பயிற்சிகள்
- 1972இல் தண்ணீர் மதிப்புமிக்கது எனும் முதல் பொதுக் கல்வி இயக்கம்
இந்த இயக்கத்திலிருந்து சுவரொட்டிகள் அல்லது பொதுப் பயனீட்டுக் கழகக் (PUB) கட்டணப்பட்டியல் அல்லது பேணி வைத்திருக்கும் பொருள்கள் உங்களிடம் உள்ளனவா மற்றும்/அல்லது 1950களிலிருந்து 1970கள் வரையிலான சிங்கப்பூரின் தண்ணீர்ப் பங்கீட்டு முயற்சிகள் மற்றும் தண்ணீர்ச் சேமிப்பு இயக்கங்கள் தொடர்பான கதைகள் உள்ளனவா?
1972இல் தண்ைீடரச் னசமிப்பதற்கா முதல் பபாதுக் கல்வி இயக்கத்தின்னபாது “தண்ைீர் அரிய பபாருள், அதட வீைாக்காதீர்” என்ற இயக்கத்தின் முழக்கவரி PUB கட்ைைப் பட்டியைில் அச்சடிக்கப்பட்ைது. ஒவ்பவாரு குடித்த த்டதயும் தன் ிச்டசயாகத் தண்ைீர்ப் பயன்பாட்டு அளடவ ெிர்ையிக்கும்படி ஊக்குவித்ததுைன் தண்ைீடரச் னசமிக்கும் னயாசட கடளயும் அது விளம்பரப்படுத்தியது.
“தண்ைீடர வீைாக்காதீர்” எனும் இயக்கத்தின் முழக்கவரியுைன் கூடிய கண்ைாடிக் காட்சி
வில்டைகள் திடரப்பைங்கள் திடரயிைப்பட்ைனபாது பயன்படுத்தப்பட்ை .
குமாரி ஜூடி வீயின் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
வீட்டுடமைத் திட்டம்
நாங்கள் எதை நாடுகிறோம்
1960களிலும் 1970களிலும் வீடமைப்பில் சிங்கப்பூரின் நகர உருமாற்றத்தைப் பற்றிக் கூறும் பொருள்களையும் கதைகளையும் நாங்கள் நாடுகிறோம்.
மேலும் தொடர்புடைய மைல்கல்களும் அரும்பொருள் எடுத்துக்காட்டுகளும்:
- பெருமளவிலான மக்கள் வீட்டுடையாளராவதற்கும் வீவக வீடுகளில் குடிபுகுவதற்கும் வசதிசெய்ய 1964இல் வீட்டுடைமைத் திட்டமும் மத்திய சேம நிதிச் சட்டத்தில் மாற்றங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
- ஜூரோங், தோபாயோ, பிடோக் மற்றும் தஞ்சோங் ரு போன்ற பகுதிகளில் வீடமைப்புக்கும் தொழிலியல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் வழிவிடும் மறுகுடியேற்ற செயல்முறை
நீங்களும் உங்கள் குடும்பமும் புதிய வீட்டிற்குக் குடிபுகும் தேவையை அறிவிக்கும் ஆவணங்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளனவா? அல்லது கட்டணம் செலுத்திய சீட்டுகள், வீவக-விடமிருந்து பெற்ற குலுக்கல் அட்டைகள், புகைப்படங்கள், உங்களின முதல் வீவக வீட்டுக்குக் குடிபுகுந்ததையும் அங்கு வாழ்க்கையைப் பழக்கப்படுத்திக்கொண்டது மற்றும் உங்கள் அக்கம்பக்கத்தாரைத் தெரிந்துகொண்டதையும் நினைவூட்டும் முதல் சாவிக்கொத்து போன்றவை உள்ளனவா?
பிடோக் புது நகர வீடுகளுக்கான 1977ஆம் ஆண்டுக் குலுக்கல் அழைப்பிதழ்
திரு வில்லியம் ஓன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
1965இல் மெக்பர்சன் பேட்டை வீடுகளுக்கான குலுக்கலில் கலந்துகொள்ளத் திரண்ட கூட்டம் .
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
வீட்டுடமைத் திட்டம், நிலைத்தன்மைக்கும் சிங்கப்பூரில் பலகலாசாரத்தன்மையை வளர்ப்பதற்குமான மைல்கல்லாகக் கருதப்பட்டது. வீவக வீடுகளில் வாழ்வதற்கு மாறிச் செல்வது சிங்கப்பூரர்கள் தங்களை மாற்றியமைத்துக்கொண்டதை எடுத்துக்காட்டுகிறது. சிலருக்கு இது சவால்மிக்க காலமாக இருந்தது, குறிப்பாக, கம்போங்கில் வளர்ந்தவர்கள். இவர்கள் வளர்ச்சித் திட்டங்களுக்காக மறுகுடியேற்றம் செய்ய வேண்டியதிருந்தது.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?