நமது தேசத்தை வரையறுத்தல்
சிங்கப்பூர் நாட்டின் தேசிய விசுவாச வார அட்டை
மஜூலா சிங்கப்பூராவை நமது தேசிய கீதமாக அறிமுகம் செய்ய இது விநியோகிக்கப்பட்டது. அந்த வாரத்தின்போது, மக்கள் தொலைபேசி வழியாகவும் அழைத்து தேசிய கீதத்தைக் கேட்டு மகிழ முடிந்தது.
குமாரி குவெக் யுவென் யுவான், அனான் அன்பளிப்பு. நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
தேசிய விசுவாச வாரத்தின் தொடக்கத்தில் சிங்கப்பூரின் முதல் அதிபரான இஞ்சே யூசுப் இஷாக்கின் பதவியேற்புச் சடங்கு இடம்பெறுகிறது.
யூசோப் இஷாக் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன் .
நமது வேசிய கீேப் பதிரே உள்ளடக்கிய 1960களின் இரைே் ேட்டு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
இன்று நமது தேசிய கீதத்தை நாம் அனைவரும் நன்கு அறிவோம். 1958இல் பாடப்பட்ட மஜூலா சிங்கப்பூராவின் இந்த வடிவம் இன்று நாம் பாடும் தேசிய கீதத்திலிருந்து எப்படி மாறுபட்டிருக்கிறது என்று உங்களால் கூற முடியுமா? 1958ஆம் ஆண்டுப் பதிப்பைக் கேட்க சொடுக்குங்கள்.
ஒலிப்பதிவு: மீடியாகார்ப் பிரைவேட் லிட். சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன் .
1958ஆம் ஆண்டு மஜூலா சிங்கப்பூராவின் பாடல் வரிகள்
Mari kita rayat Singapura,
bangun dengan bersatu,
sama sama!
Rukonda mai dan bantu membantu, supaya kita sama sama maju!
Kita hidop aman dan sentosa,
kerja sama menuju bahagia
chita chita kita yang mulia
berjaya Singapura
mari lah kita bersatu!
Dengan semangat yang baru!
Samua kita berseru!
Majula Singapura!
Majula Singapura!
Mari ra!
நமது தேசிய கீதப் பாடல் வரிகள்
Mari kita rakyat Singapura
Sama-sama menuju bahagia
Cita-cita kita yang mulia
Berjaya Singapura
Marilah kita bersatu
Dengan semangat yang baru
Semua kita berseru
Majulah Singapura
Majulah Singapura
நமது தேசியப் பற்றுறுதிமொழி முதன் முதலில் 1966ஆம் ஆண்டில் ஒப்புவிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? 1966 பிப்ரவரி 18 தேதியிடப்பட்டு திரு ஓங் பாங் பூன் (அப்போதைய கல்வி அமைச்சர்) அவர்களுக்கு அனுப்பப்பட்ட இக்கடிதம் (அப்போதைய கலாசசார அமைச்சர்) திரு எஸ் ராஜரத்தினம் எழுதிய பற்றுறுதிமொழியின் தொடக்க கால முன்வரைவைக் காட்டுகிறது.
பற்றுறுதிமொழியின் இந்த முன்வரைவும் நாம் இன்று கூறும் பற்றுறுதிமொழியும் இளம் தேசம் என்ற அடிப்படையில் அப்போதும் இப்போதும் நமக்கு முக்கியைாக விளங்கும் விழுமியங்களைப்பற்றி நமக்கு என்ன கூறுகின்றன?
கல்வி அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
தேசியப் பற்றுறுதிமொழியின் வரைவு
சிங்கப்பூர் மக்கள் என்ற
முறையில், நாம்
இனம், மொழி, சமய வேறுபாடுகளை மறந்து
ஒன்றுபட்ட மக்களாக ஆகி,
ஜனநாயக சமுதாயத்தை
உருவாக்குவோம்
அங்கு நீதியும் சமத்துவமும் நிலவும்
ஒருவருக்கு ஒருவர் உதவுவதன் வழி,
மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் நாடுவோம்
நமது தேசியப் பற்றுறுதிமொழி
சிங்கப்பூர் குடிமக்களாகிய நாம்,
இனம், மொழி, மத
வேற்றுமைகளை மறந்து
ஒன்றுபட்டு, நம் நாடு
மகிழ்ச்சி, வளம் முன்னேற்றம்
ஆகியவற்றை அடையும் வண்ணம்
சமத்துவத்தையும், நீதியையும்
அடிப்படையாகக் கொண்ட
ஜனநாயக சமுதாயத்தை
உருவாக்குவதற்கு
உறுதி மேற்கொள்வோமாக.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்