இன நல்லிணக்கத்தை வளர்த்தல்
மசெகவுக்கும் அம்னோவுக்கும் இடையிலான அரசியல் நெருக்கடிகளின் பின்னணியில் 1964இல் இனக்கலவரம் மூண்டு அது சிங்கப்பூர் முழுவதும் பரவியது. இருப்பினும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவருக்கொருவர் உதவவும் ஒருவரையொருவர் பாதுகாக்கவும் பலரும் முன்வந்தனர்.
“அமைதிக் குழுக்கள்” எனவும் அழைக்கப்பட்ட நல்லெண்ணக் குழுக்கள் மூலம் , சமுகங்களுக்கிடையிலான பிணைப்புகள் வலுப்படுத்தப்பட்டன.
1964 ஜூலை 24ஆம் தேதி கேலாங் சிராய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடம் பேசும் திரு லீ குவான் இயூவும் (அப்போதைய சமூக விவகார அமைச்சரான) திரு ஒத்மான் வோக்கும்.
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.
சிங்கப்பூர் எங்கும் இருந்த நல்லெண்ணக் குழுக்களின் வெற்றி பற்றி 1964 ஜூலை 28இல் வெளியிடப்பட்ட ஒரு செய்திக் கட்டுரை
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
குவீன்ஸ்வே ஆலோசனைக் குழுவில் தமது ஈடுபாட்டுக்கான அங்கீகாரத்தைப் பெறும் வகையில் திரு ஜெக் யுவன் தொங்குடன் கை குலுக்கும் திரு செங் சூன் எங்.
1960களில் அடித்தள நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட திரு செங், முதல் தலைமுறைத் தலைவர்களான திரு ஜெக் யுவன் தொங் மற்றும் திரு ஒத்மான் வோக்குடன் பணியாற்றினார். ஊக்கம் மிக்க தொண்டராகவும் இருந்த அவர், தமது அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை ஒன்றுதிரட்ட தேசிய தின விழாக்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்ததுடன் தமது தொகுதியின் குடிமைத் தற்காப்புப் பிரிவிலும் பங்கு வகித்தார். வசிப்போர் குழுவில் ஆற்றிய அர்ப்பண உணர்வுமிக்க சேவையை அங்கீகரித்துப் பாராட்டும் சான்றிதழை 1986இல் பெற்றார்.
Mr Cheng Choon Eng ஆதரவுடன்.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்