Banner Image

அத்தியாயம் 1

சிங்கப்பூருக்கு நம் பங்கை ஆற்றுதல்

சிங்கப்பூரைத் தற்காத்தல்

சிறிய, எளிதில் இடருக்கு ஆளாக்ககூடிய இளம் தேசமாகிய நாம் நமது தொடக்ககாலத்தில் அச்சுறுத்தும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொண்டோம். இந்தக் கவலைகளைப் போக்க தேசிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. .ஒரு பொதுவான தேசிய அடையாளத்தையும் ஒரு வலுவான தற்காப்புப் படையையும் உருவாக்குவதற்கான அடிப்படையாகவும் அது விளங்கியது.
Card

திரு டிசூசா, இங்கிலாந்தில் தம் 21ஆம் வயதில், 1968 டிசம்பரில் ஒரு விமானி ஆவதற்குப் பயற்சி பெறுகிறார்.

திரு டிமதி டி சூசா ஆதரவுடன்.

திரு டிமதி டி சூசா SAFTI இராணுவப் பயிற்சிக் கழகத்தின் முன்னோடி அதிகாரிகளில் ஒருவராகப் பயிற்சி பெற்ற பிறகு, 1968இல் சிங்கப்பூர்க் குடியரசு விமானப் படையின் முதல் விமானிகள் குழுவில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றார்.

இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள்.

தமது இல்லத்தையும் தேசத்தையும் தற்காக்க முன்வருவதற்கு திரு
டி சூசாவைத் தூண்டியது எது?

சிங்கப்பூர் சீன வர்த்தக சபையினால் பணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பதக்கம், 1967ல் தேசிய சேவைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்ட முதல் தொகுதியினரான 900 பேருக்கு வழங்கப்பட்டது. நாட்டிற்கு மிகுந்த விசுவாசத்துடன் சேவையாற்றுதல் என்னும் பொருள் கொண்ட “尽忠报国” சீன எழுத்துக்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.

நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.