Banner Image

மக்களுக்கான இல்லம்

மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பது மலைக்க வைக்கும் ஓர் இலட்சியத் திட்டமாகத் தொடங்கியது.

“திரு வீவக” என அன்போடு அறியப்பட்ட திரு லிம் கிம் சான், சிங்கப்பூரின் பொது வீட்டு வசதித் திட்டத்திற்குத் தலைமை தாங்கினார். முதல் நான்கு ஆண்டுகளில் 30,000க்கு மேற்பட்ட வீடுகளைக் கட்ட வீவகவை அவர் வழி நடத்தினார். வீவகவிற்கு முந்தைய சிங்கப்பூர் மேம்பாட்டு டிரஸ்ட் (எஸ்ஐடி) அமைப்பு 32 ஆண்டுகளில் கட்டிய சுமார் 23,000 வீடுகளுடன் இது அடிக்கடி ஒப்பிடப்படுவதுண்டு.

பொது வீடமைப்பு இந்த அளவுக்குக் கட்டப்படும் என்று முதலில் வாக்குறுதியளித்தபோது, எஸ்ஐடியில் இருந்தவர்கள் அது சாத்தியமற்றது என அதை நிராகரித்தனர். எல்லாச் சிரமங்களையும் எதிர்த்து நின்று வீவக தான் சொன்னதைச் செய்து முடித்தது, தங்களுக்குச் சொந்தமென அழைக்க வாழ்க்கையில் எல்லா நிலையிலும் உள்ள சிங்கப்பூரர்களுக்கு அது வீடுகளை வழங்கியது.

Card

பிடோக் புது நகரில் வீடுகளுக்கான குலுக்கல் முறை தெரிவுக்கான 1977ஆம் ஆண்டு அழைப்பு அட்டை

திரு வில்லியம் ஓன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .

Card

1965இல் மெக்பர்சன் பேட்டையில் வீடுகளுக்கான குலுக்கல் முறைத் தெரிவுக்குக் கூடிய கூட்டம்

தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.

இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .


Card

தமது குடும்பத்தின் முதல் அடுக்குவீட்டுக்கான வீவக ஆவணங்களுடன் திரு ஆவ் செக் ஙீ.


திரு ஆவும் அவரின் குடும்பமும் அவர் தேசிய சேவைக்குச் செல்லும் முன்னர் தங்களின் முதல் வீவக வீட்டில் குடிபுகுந்தனர். மூத்த மகன் என்ற முறையில் அவரும் அவரின் தாயும் கூட்டு உரிமையாளராக அவர்களின் குத்தகையில் கையெழுத்திட்டனர். தங்களுக்குப் பழக்கமான கம்போங் சூழலைவிட்டு வேறு இடத்திற்குச் செல்வது குடும்பத்திற்கு ஒரு பெரிய மாற்றமாக இருந்தது, 4-அறை வீட்டுக்கு மேம்படுத்திக் கொள்வதற்கு முன்னர் நிதியியல் காரணங்களால் அவர்கள் 3-அறை வீட்டுக்கு விண்ணப்பித்தனர். கிளை மொழியிலேயே அதிகம் பேசும் ஒரு குடும்பம் என்பதால், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட விதிமுறைகளை விளக்க அவர்கள் வீவக பிரதிநிதிகளைப் பெரிதும் நம்பியிருந்தனர்.

திரு ஆவ் பசக் ஙீ ஆதரவுைன். 

Card

1968இல், பார்க் ரோடு கட்டுமானத் தளத்திற்குச் சென்றபோது வீட்டு வரைபடத்தைப் பார்வையிடும் (அப்போதைய சட்ட, தேசிய வளர்ச்சி அமைச்சர்) திரு E.W. பார்க்கர்.

நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் சிங்கப்பூரர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் மேலாக அவர்களுக்கு இல்லங்களை உருவாக்கினர். சமூக நடவடிக்கைகளுக்கும் ஒன்று கூடல்களுக்குமான சமூக இடங்களாக இன்று நாம் பயன்படுத்தும் வெற்றுத் தளங்கள் திரு பார்க்கரின் யோசனையிலிருந்து தொடங்கியவை. விளையாட்டுக்களின் பெரும் ஆதரவாளரான அவர், மழையில் விளையாடி நனைந்த சிறுவர்களைப் பார்த்த பிறகு , வெற்றுத் தளங்களை அமைக்கும் யோசனையைத் தெரிவித்தார். வீடுகளுக்கு மேலாக மற்ற தேவைகளையும் இது மறு உறுதிப்படுத்தியது. தங்களின் அக்கம்பக்கங்கள் வசதிமிக்கதாகவும் மகிழ்ச்சிமிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.

தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் © எஸ்பிஎச் மீடியா லிமிட்டெட் ஆதரவுடன். மறுபிரசுரத்திற்கு அனுமதி தேவைப்படும்.

Card

“நமது மக்களுக்கான இல்லங்கள்” என்ற முழக்கவரியைக் கொண்ட பதக்கம், வீவக-வின் முதல் தலைவராகப் பங்காற்றிய திரு லிம் கிம் சானைப் பாராட்டி 1983இல் வழங்கப்பட்டது.

திரு லிம் கியட் செங்கின் (Mr Lim Kiat Seng) அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.

புதிய வாழ்க்கை முறைக்கு மாற்றிக்கொள்ளுதல்

இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?

எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.