பூந்தோட்டத்தில் ஒரு நகரமாக சிங்கப்பூரை மாற்றுதல்
இன்று நாம் சிங்கப்பூரில் அனுபவிக்கும் பசுமை, பல பத்தாண்டுகளுக்கு முன்னர் நமது முதல் தலைமுறைத் தலைவர்கள் அதனை தேசியச் செயல் திட்டத்தில் இடம்பெறச் செய்ததிலிருந்து தொடங்கியது.
சிங்கப்பூரை ஒரு பூந்தோட்ட நகரமாக மாற்றுவதில் திரு லீ குவான் இயூ தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். பூந்தோட்ட நகர் செயல் குழுவின் கீழ் பல அமைப்புகளை அவர் கொண்டுவந்தார். பேட்டைகளிலும் சாலையோரங்களிலும் மரங்கள் நடுவதைக் குழு அறிமுகம் செய்ததுடன், நிலத்திற்கான போட்டிமிக்க தேவைகளுக்கிடையே, நமது நகர்ப்புற நிலப் பகுதியிலும் செடி கொடிகளை அறிமுகம் செய்தது.
1975இல், ஜூரோங்கில் உள்ள சீனத்தோட்டத் திறப்பு விழாவில் பயன்படுத்தப்பட்ட கத்திரிக்கோல் (அப்போதைய நிதி அமைச்சர்) திரு ஹொன் சுயி சென்னுக்கு வழங்கப்பட்டது.
சீனத் தோட்டத் திறப்பு விழாவின்போது, திரு ஹொன் சுய் சென், “ ஜூரோங்கின் தொடக்ககால வளர்ச்சி மும்முரமாக இருந்ததுடன் அவ்விடத்தில் இயற்கை அழகில் அதிகக் கவனம் செலுத்தப்படவில்லை... இத்தோட்டத்திற்குச் சென்று வருவது நம்மில் பெரும்பாலானவர்களின் பரபரப்பு மிகுந்த வாழ்க்கையில் சிறிது ஆறுதல் அளிப்பதாக அமையும்” என்றார். ”
ஹொன் சுய் சென் நினைவு நூலகம் ஆதரவுடன்.
1974ஆம் ஆண்டில் மரம் நடும் தினத்தில் (அப்போதைய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்) டாக்டர் டோ சின் சாய்.
சிங்கப்பூரில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதிலாக அவற்றின் இடத்தை மீண்டும் நிரப்பும் இயக்கமாக மரம் நடும் நாள் தொடங்கியது. முதல் மரம் நடும் நாள் 1971 நவம்பர் 7இல் இடம்பெற்றது. அதிலிருந்து இன்றுவரை அது ஆண்டு நிகழ்வாக நடைபெறுகிறது.
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
இது நாம் நடத்தும் இரட்டை இயக்கம் – ஒன்று தூய்மைப்படுத்துவது, இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது, அதை மேலும் தூய்மைப்படுத்துவது; இரண்டாவது,மரங்களையும் பூச்செடிகளையும் வளர்த்து அந்த இடத்தை மேலும் அழகுபடுத்துதல்... நீரூற்றுக்கள், பசுமை, சாலை வட்டங்களிலும் மற்ற இடங்களிலும் மரங்கள், மூன்று ஆண்டுகளுக்குள் இதை நாம் ஒரு பூந்தோட்ட நகரமாக்கிவிட முடியும்...
சிங்கப்பூர்ப் பூமடை பவளியிட்ை மரம் ெடுைதற்கான வழிகாட்டி. இங்கு ஆங்கிை, மைாய், சீ , தமிழ் பமாழிகளில் காைப்படுகின்றது. சிங்கப்பூறரப் பசுறைப்படுத்தும் ததாடக்க கால முயற்சிகளின் ஒரு பகுதியாக, சமூகத்தின் ஆதரறையும் பங்தகடுப்றபயும் ஊக்குைிக்கும் ைறகயில் 1963இல் “ைரம் நடுைதற்கான ைழிகாட்டி” தைளியிடப்பட்டது.
சிங்கப்பூர்ப் பூமலை ஆதரவுடன்.
மரம் நடுவதற்கான வழிகாட்டிக் கையேட்டின் பிரதி, பசுமைத் திட்ட முயற்சிகளை மேம்படுத்தும் இதர இயக்க வெளியீடுகள் அல்லது மரம் நடும் நிகழ்ச்சிகளின்போது கிடைத்த பொருள்கள் ஏதும் உங்களிடம் உள்ளனவா? எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்