பெருமையுடன் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது
சிங்கப்பூர் எங்கும் தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டதுடன் இவற்றில் பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர் நிறுவனங்களும் கலந்து இடம் பெற்றிருந்தன. இந்தப் பேட்டைகளில் வேலை செய்த சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட செட்ரான் தொலைக்காட்சிப் பெட்டிகள், ரோலாய் காமிராக்கள் போன்ற பெயர்பெற்ற பொருள்களுக்குப் பொறுப்பேற்றனர். இப்பொருட்கள் அவற்றின் தரத்திற்காக உள்ளூரிலும் வெளிநாட்டிலும் அங்கீகராம் பெற்றன.
60களின் இறுதி - 70களின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட செட்ரான் வானொலிப் பெட்டி.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
1966இல் தங்ளின் ஹால்ட்டில் அமைந்திருந்த செட்ரான் தொழிற்சாலை ஊழியர் ஒருவர்
தகவல், கலை அமைச்சின் சேகரிப்பு. சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் ஆதரவுடன்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம். எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
1964இல் செட்ரான் (சிங்கப்பூர் எலக்ட்ரானிக்ஸ்) லிமிடெட் நிறுவனம் தயாரித்த கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
1970களில் ரோலாய் உழியர்கள் அணிந்திருந்த கோட் (மேலங்கி) .
திரு சொங் நாம் சொய்ன் அன்பளிப்பு.
நன்றி: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகச் சேகரிப்பு.
காமிரா உற்பத்திப் பிரிவில் மேற்பார்வையாளராக வேலை செய்த திரு சொங் நாம் சொய், ரோலாய் தொழிற்சாலையில் அணிந்திருந்த அதே கோட்டுடன் (மேலங்கியுடன்)
திரு சொங் நாம் சொய் ஆதரவுடன்.
சிங்கப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட ரோலாய் 35 எல்இடி (LED) காமிரா
திரு சொங் நாம் சொய் ஆதரவுடன்.
இது போன்ற அரும்பொருளை நாங்கள் நாடுகிறோம்.எங்கள் விருப்பப் பட்டியலைப் பாருங்கள் .
1960களில் நிகழ்ந்த இந்தத் தொழில்மயமாக்கல் அலையில் பங்கேற்றது எப்படி இருந்தது?
திருவாட்டி ஜைனாபும் அவரின் பற்றவைக்கும் கருவியும்
16 வயதாக இருக்கும்போதே திருவாட்டி ஜைனாப் ரோலாயில் சேர்ந்துவிட்டார். காமிரா பாகங்கள் ஒன்றாகப் பொருத்தப்படுவதற்கு முன்னர் அவற்றின் தரத்தை அவர் உறுதி செய்தார். சிங்கப்பூரின் பொருளாதாரம் வளர்ந்து மாறிவரும் வேளையில், Asahi, Team and Connor Peripherals போன்ற நிறுவனங்களுக்கு மாறிச்செல்ல ரோலாயில் பெற்ற அனுபவம் அவருக்கு மிகவும் பயன்மிக்கதாக இருந்தது. அங்குதான் அவர் வேலை செய்துகொண்டே பற்றவைப்புப் பணியையும் கற்றுக்கொண்டார்.
திருைாட்டி றஜனாபின் ஆதரவுைன்.
இவை போன்ற அரும்பொருள்களும் கதைகளும் உங்களிடம் உள்ளனவா?
எங்கள் திரட்டில் உங்களுடையதையும் சேர்த்துக்கொள்ளப் பெரிதும் விரும்புகிறோம்.
மற்ற ஊக்கமூட்டும் கதைகளையும் பாருங்கள்